ஜனாதிபதி ரணில் நாடு திரும்பினார்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவிற்கான அதிதியாக இங்கிலாந்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை காலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் இ.கே. 650 என்ற விமானம் இன்று காலை 8.30 அளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்துள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்றிருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்