ஜனாதிபதி மாளிகையிலிருந்து மீட்கப்பட்ட பணம் நீதிமன்றில் ஒப்படைப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம் கோட்டை நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட சுமார் ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்று 3 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த பணத்தொகை தொடர்பில் நீதிமன்றுக்கு எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், குறித்த பணத்தொகையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதிவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி இன்று வெள்ளிக்கிழமை குறித்த பணம் கோட்டை நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.