ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமருக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் (Hyderabad House) இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை மிகுந்த நட்புடன் வரவேற்ற இந்தியப் பிரதமர், தனது அழைப்பை ஏற்று AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இணைந்துகொண்டனர். இதன்போது இலங்கை – இந்திய இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.

இதேவேளை, ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இலங்கைக்கு வழங்கிய விசேட ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி, இந்தியப் பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.