
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிபென்டர் ரக வாகனம் ஒன்று தலாவ பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் டிபென்டர் ரக வாகனத்தில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி விபத்தில் காயமடைந்த நால்வரும் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
