ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீதியமைச்சரின் அறிவிப்பு

அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல், கட்டாயம் நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ கண்டியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் படி, கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், பொதுத் தேர்தல் தொடர்பில், இதுவரை எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.