ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு. மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் 2024 வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தேர்தல் நடைமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்கள்,  தொடர்பாக தெளிவூட்டும் செயலமர்வு தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்கள்  தொடர்பாக தெளிவூட்டும் செயலமர்வு மாவட்டத்  தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி ஜஸ்டினா முரளிதரன்  தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

மாவட்ட  உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சுவிஹானின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் தெளிவூட்டும் செயலமர்வில், மாவட்டத்தில் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்