ஜனாதிபதி செயலக பிரதான நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மறித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மேடைகளை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.