ஜனாதிபதி செயலகம் அருகே உயிர் மாய்க்க முற்பட்ட இளைஞன்
கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்து குழப்பம் விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள சமிஞ்சை விளக்கு கம்பத்தில் ஏறி தன்னுடை உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக குறித்த நபர் மிரட்டியுள்ளார்.
இந்தநிலையில், அங்கிருந்த மக்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், அவர் கீழே இறங்காமல் தொடர்ந்தும் சமிக்ஞை விளக்கு கம்பத்திலேயே அமர்ந்திருந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டுள்ளனர்.
இதையடுத்து, அவரை சம்பவ இடத்திலிருந்து பொலிஸார் அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.