ஜனாதிபதி செயலகத்தில் இருந்து 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளன. விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 833 வாகனங்களில் 29 வாகனங்கள் கணக்கில் வரவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

காலி முகத்திடலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால, அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தனது கவலையினை வெளிப்படுத்தினார்.