
ஜனாதிபதி எங்களுக்கு கிடைத்த கிப்ட் – திருகோணமலை மீனவர்களின் கோரிக்கை
-கிண்ணியா நிருபர்-
தற்போது எமக்கு கிடைத்துள்ள ஜனாதிபதி ஹிப்ட் எனவும் 76 வருடங்களாக காணாத ஜனாபதியை கண்டுள்ளோம் எனவே எமது மனையாவெளி மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள் என மனையாவெளி படகு சேவையில் ஈடுபடும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்த அவர்கள்,
1990களில் யுத்தத்தின் போது தாங்கள் மனையாவெளியை விட்டு வெளியேறிம்ய பின்னர் கரையோர சுற்றுலா பகுதிகளை கொண்ட காணிகளை கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
இதனை விடுவித்து தருமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றனர்.
மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும்கடற்கரையானது கடற்படையினரின் ஆக்கிரமிப்பால் தற்போது பயணிகளின் வருகை குறைவடைந்து சுற்றுலாத் துறை பாதிக்கப்படுகிறது என தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அங்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கடலுக்குல் டொல்பின் மீன்களை பார்வையிட படகுகளுக்காக அனுமதி வழங்கப்படுகின்ற போதும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகிறதன்னால் தங்களுக்கு ஓரிரு அனுமதி பத்திரத்தையே வழங்குவதக்க கூறுகின்றனர்.
இதனால் வாழ்வாதாரத்தை இழந்தா நிலையில் 2004 ம் ஆண்டுக்கு பின் கலர் மீன்களை பிடித்து சுழியோடுதலில் ஈடுபட்டு வருமானமீட்டினோம் ஆனால் தற்போது அந்த தொழிலும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்..
இதனை தொடர்ந்து 2017,2018 ல் இருபது இலட்சம் ரூபா வரை படகு சேவைக்காக முதலீடுகளை செய்து வாழ்வாதாரத்தை மேற்கொண்ட நிலையில் தற்போது எங்களுக்கு இல்லாமல் வெளி மாவட்டங்களை சேர்ந்த மாத்தறை கொழும்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளனர்.
எனவே எமது பகுதி மக்களுக்கு இந்த சுற்றுலாத் துறையை மேம்படுத்த கடற்படை வசமுள்ள காணிகளை விடுவித்தும் படகு சேவைகளை ஈடுபடுத்த சுற்றுலாப் பகுதிக்கான அனுமதிப்பத்திரங்களையும் வழங்க வேண்டும் இங்கு 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 103 அனுமதிப்பத்திரங்களை டொல்பின் வோட்ச் பார்வைக்காக வழங்கியுள்ளனர் இதில் இரு அனுமதி பத்திரங்களையே எமது பகுதிக்கு வழங்கியுள்ளனர்.
எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் அனுமதி பத்திரங்களை வழங்குங்கள் என கோரிக்கைவிடுக்கின்றனர்.
