ஜனாதிபதி உள்ளிட்ட பலருக்குப் பாதுகாப்பு தேவை

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு தேவை என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

பாதாள உலக மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களை அவர்கள் கையாள்வதால் இந்த பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அவர்கள் மக்களுடன் இருக்கும் வரை, மக்களே அவர்களின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி ஒரு பாதாள உலகக் குழுவுக்கு உதவினால், மற்றுமொரு பாதாள உலகக்குழு அவர்களை எதிர்க்கும் என்பதிலேயே சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டவுடன், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், அதிலிருந்து வெளியேற முற்பட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தான் ஒருபோதும் பாதாள உலகத்துடன் இருந்ததில்லை என்றும், அதனாலேயே தனக்குப் பாரிய பாதுகாப்பு பிரச்சினை இல்லை என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.