ஜனாதிபதி இன்று அமெரிக்காவுக்கு பயணமாகிறார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது அமர்வில் கலந்துக் கொள்ள ஜனாதிபதி அமெரிக்காவுக்குப் பயணமாகிறார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.15 இற்கு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார் .
