ஜனாதிபதி அநுரவின் உருவப்படத்தை அமைத்து சோழன் உலக சாதனை புரிந்த சிறுவன்

ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி சிறுவனொருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

சன்சுல் செஹன்ஷா லக்மால் என்ற 11 வயது சிறுவன் 1,200 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார்.

அவர் இந்த சாதனையை 3 மணி நேரம், 13 நிமிடங்கள், 7 வினாடிகளில் செய்து சோழன் உலக சாதனைகளில் இடம் பெற்றார்.

சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.

யக்கலவில் உள்ள ரணவிரு நீச்சல் தடாக முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மஹா துவாக்கர் மற்றும் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் வாசகே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

சோழன் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் பொதுச் செயலாளர், இந்திரநாத் பெரேரா, துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் ஐரோப்பிய நாடுகளுக்கான தலைவர் பிரான்சிஸ் ஜேசுதாசன், பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் இயக்குநர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகியோர் கொண்ட குழு சிறுவனின் சாதனை முயற்சியை முறையாக கண்காணித்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்