
ஜனாதிபதியைச் சந்தித்த சஹ்மி
பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் நேற்று முன்தினம் புதன் கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
இவர் இலங்கையின் கரையோரம் வழியாக 45 நாட்களில் 1500 கிலோ மீற்றர் தூரம் சுற்றி நடந்து சாதனை படைத்துள்ளார்.
பேருவளையில் இருந்து ஆரம்பித்த சஹ்மி ஷஹீதின் பயணமானது மிரிஸ்ஸ, ஹிரிகெட்டிய, ரன்ன, ஹம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, சியம்பலான்டுவ, பொத்துவில், நிந்தவூர், செங்கலடி, நிலாவெளி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, சுன்னாகம், மன்னார், அநுராதபுரம், புத்தளம், கொழும்பு, மாரவில, நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய முக்கிய நகரங்களைக் கடந்து பேருவளையில் நிறைவடைந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
