
ஜனாதிபதியுடன் இரண்டாவது நாளாகவும் இன்று சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சந்திப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்றைய தினம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
