
ஜனாதிபதியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் பாதிப்பு: சஜித்
எமது நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டனர், இன்று பொய்யான வாக்குறுதிகளால் தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் பாதிக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சாதாரண மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்ததும், நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து சலுகைகளையும் பொது மக்களுக்கு வழங்குவார் என மக்கள் எதிர்பார்த்தும் இன்று மக்கள் எதிர்நோக்கி வரும் சுமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காது இருந்து வருகிறார்.
பொருட்களின் விலை, எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம், வரி போன்றவற்றைக் குறைக்கப் போவதாகச் சொன்னாலும் எதுவும் நடந்த பாடில்லை. நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் இவை அனைத்தையும் செய்ய முடியும். ஆனால் அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்காதிருந்து வருகிறார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
