வடமாகாணத்தில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவருடைய பிறந்தநாள் இளைஞர்களால் கொண்டாடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிகுளம் சந்தி இளைஞர்களின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் ஜனாதிபதி அனுராகுமார திசாநாயகவின் 57வது பிறந்தநாள் கேக் வெட்டி மற்றும் வீதியால் சென்ற மக்களுக்கு கேக் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இளைஞர்கள்,
முன்னைய ஆட்சியாளர்கள் எவரும் சொன்னதை செய்வதில்லை தற்போதைய ஜனாதிபதி சொன்ன வாக்குறுதிகளை செயற்படுத்தி வருகிறார்
போதை பொருளை முற்று முழுதாக அழித்து, இளைய தலைமுறையை போதைப் பொருளிலிருந்து மீட்டெடுத்து, நாட்டின் போதை பொருளை முற்று முழுதாக ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமை எமக்கு பிடித்துள்ளது என தெரிவித்தனர்.






