ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு செத்பாத ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை நிகழ்வு ஆலய நிர்வாக அதிகாரி கலாநிதி கிரிந்தே அசாஜி தேரர் தலைமையில் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்றது.

“யூத் 2048” அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்குப் புத்தக பைகள் ஆகியவற்றை விநியோகம் செய்வதிலும் பங்களித்தது.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, கொழும்பு மாவட்ட முகாமையாளர் லசந்த குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.