
ஜனாதிபதியின் சின்னம் அகற்றப்பட்டது
முதன்முறையாக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் இருக்கையில் இருந்து ஜனாதிபதியின் சின்னம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு பதிலாக அரச இலச்சினையைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதியின் கொடி மற்றும் இலச்சினையை இல்லாதொழிப்பதற்கு எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
