ஜனாதிபதியின் உருவம் பதித்த நாணயத்தாளுடன் ஒருவர் கைது

கொழும்பு – பிலியந்தலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள் ஒன்றை உருவாக்கிய நபர் நேற்று திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அண்மையில் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரப்பப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே குறித்த சந்தேக நபர் நேற்று 5000 ரூபா நாணயத்தாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கமும் மத்திய வங்கியும் புதிய நாணயத்தாள்கள் அச்சிடுவதற்கு நிதியமைச்சரின் கையொப்பம் தேவை என்பதை சுட்டிக்காட்டியதுடன் நிதியமைச்சராக இருக்கும் ஜனாதிபதி, அவ்வாறான எந்தவொரு நோக்கத்திற்காகவும் தனது கையொப்பத்தை வழங்கவில்லை எனத் தெரிவித்தது.

ஜனாதிபதியின் கையொப்பம் அல்லது உருவம் கொண்ட நாணயத் தாள்கள் நாட்டில் புழக்கத்தில் இல்லை என்றும் அரசாங்கம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்