ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்தவர் கைது

கடந்த மாதம் 9ஆம் திகதி கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெரணியகல பகுதியில் வைத்து அவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர், சமன்புரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.