ஜனாதிபதியாக இன்று அநுரகுமார பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நம்பிக்கை?

அநுரகுமார திஸாநாயக்க வெற்றியாளராக அறிவிக்கும் இறுதி அறிவிப்பு சரியான நேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டால், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அல்லது இரவு புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ய முடியும் என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பதவிப் பிரமாண நேரத்தை உறுதிப்படுத்த முடியாது என இதன் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

“இறுதி அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியிடப்பட்டால், இன்று பதவியேற்பு நடைபெறலாம்,” என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.