ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 4,500யை விட தாண்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் புதிதாக 170 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4,500யை விட தாண்டியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31 முதல் செப்டம்பர் 16 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 4,581 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற மொத்த புகார்களில் 1408 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் புகார் மேலாண்மை மையத்துக்கும் , மேலாண்மைக்கான மாவட்ட மையங்களுக்கு 3173 புகார்கள் வந்துள்ளன.

அனைத்து புகார்களும் சட்ட மீறல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, இவற்றில் 30 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்