ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை இடம்பெறவுள்ளது.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 23 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அதில் அடங்குகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான நடவடிக்கை கடந்த ஜூலை 26ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்