
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர்?
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது, காலத்தின் தேவையாகும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடவுள்ள சிங்கள வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட மாட்டாது எனவும் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
