ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள்
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தின் கீழ், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து, அக்கரப்பத்தனைப் பிரதேச தொழிலாளர்கள் நேற்று(09) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, தொழிலாளர்கள் பாயாசம் தயாரித்துப் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அத்துடன் பல ஆண்டுகளாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த கஷ்டங்களை அங்கீகரிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, கருணைமிக்க தீர்மானம் என்று தொழிலாளர்கள் பாராட்டியுள்ளனர்.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களின்றி, எந்தவொரு அரசாங்கமும் பெருந்தோட்ட ஊதியத்தை உயர்த்தியது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும் என தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்த ஜனாதிபதியைப் பாராட்டிய தொழிலாளர்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அவரது தற்போதைய அரசாங்கத்திற்கும் 2028க்கு அப்பாலும் முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
