ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ராஜபக்ஷக்களுக்கு டீல் இல்லையெனில், ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தொடர்பில் அந்த கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சஜித் பிரேமதாசவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி 47 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

அவற்றை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு நாம் ஆதரவு தெரிவித்துள்ளளோம்.

அந்த கோரிக்கைகளில் வீடமைப்பு காணி உரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக வேலுசாமி இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்