ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை : உயிரியல் தகவல்கள் உள்ளடக்கம்

டிஜிட்டல் அடையாள அட்டை அடுத்த ஆண்டு (2024) ஜனவரி முதல் வழங்கப்படவுள்ளது.

இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிரியல் தகவல்கள் அடங்கும்.

அத்துடன் ​​பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் அளிக்க வேண்டும்.

இத்திட்டத்திற்காக மொத்தமாக கணிப்பிடப்பட்டுள்ள தொகையில் 15% அதாவது 450 மில்லியன் ரூபா இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதுடன் இந்திய இலங்கை கூட்டு ஒப்பந்தத்துக்கமைய குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.