ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு
அரச ஊழியர்களுக்கான வேதனம் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிலுவையிலுள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையின் பிரகாரம் உரிய வேதன உயர்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்து அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை நிறைவேற்றியுள்ளார்.
மேலும் அரசு ஊழியர்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
