ஜனவரி மாதம் முதல் மின்கட்டணத்தில் திருத்தம் : மின் பட்டியலில் 6 வகையான வரிகள் இணைப்பு

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும், என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மேலும், மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை எதிர்க்கட்சியினர் முன்வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, புதிய மின்சார சட்டமூலத்துக்கு அமைய, மின்சார பட்டியலில் புதிதாக 6 வகையான வரிகள் உட்படுத்தப்படுவதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த, அந்த சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர்.அத்துல இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.