ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்ற அரசாங்கம்

அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த கடனை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவரி மாதத்தில் அரசாங்கம் 750 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது.

இந்த மாதத்தின் கடந்த 14 நாட்களில் அரசாங்கம் 580 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த வருடத்தில் இதுவரை 2.3 ட்ரில்லியன் ரூபாவினை கடனாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க