ஜனவரியில் அதிகரித்தது பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கொழும்பின் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் சற்று அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

டிசம்பர் மாதம் 2.1% ஆக இருந்த பணவீக்கம், ஜனவரி மாதத்தில் 2.3% ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி உணவுப் பொருட்களுக்கான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் டிசம்பரில் 3.0% ஆக இருந்தது.

தற்போது ஜனவரியில் 3.3% ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் உணவு அல்லாத பணவீக்கம் எவ்வித மாற்றமுமின்றி 1.8% என்ற நிலையிலேயே நீடிக்கிறது.