
தளபதி விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலுக்கான ப்ரோமோ (Promo) இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் பாடல் நாளை உத்தியோகபூர்வமாக வெளியாகவுள்ளது.
அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே வெளியான “தளபதி கச்சேரி” பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்தப் புதிய பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னைய கடைசித் திரைப்படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
இத்திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
