ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இன்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

இது அவரது கையொப்பத்துடன் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நியமனக் கடிதத்தின் மூலம் அரச ஊழியராகத் தம்மை அடையாளப்படுத்திய ஒருவர் தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட நியமனக் கடிதம் தொடர்பாக, அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இவர் அழைக்கப்பட்டுள்ளார்.