ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல -பொலிஸ் மாஅதிபர்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல என பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான அவரது தொடர்புகளே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரம்ப விசாரணையில் இந்த அச்சுறுத்தல்கள் அத்தகைய தொடர்புகளுடன் தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினருக்குத் தற்காலிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மாஅதிபர் உறுதிப்படுத்தியுள்ளார் .
பாதாள உலகம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களுடனான அவரது கடந்தகால கொடுக்கல் வாங்கல்களே என புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக பொலிஸ் மாஅதிபர் கூறியுள்ளார் .
மேலும், ஜகத் விதானவின் கோரிக்கையைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அச்சுறுத்தலின் மூலத்தை உறுதிப்படுத்தவும், இதில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் காணவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.
