சோள இறக்குமதியை குறைக்குமாறு அறிவுறுத்தல்
சோள இறக்குமதியை அடுத்த வருடம் 150,000 மெற்றிக் டன்னாக குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது வருடாந்தம் 300,000 மெற்றிக் டன் சோளத்தை இறக்குமதி செய்வதாகவும் சோள இறக்குமதி செலவுக்காக ஒதுக்கப்படும் அந்நியச் செலாவணியைக் குறைக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம், தற்போது சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து விதைகளை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டமும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
