சோலார் பெனல் தொடர்பில் புதிய கட்டண முறை
கூரையுடன் இணைக்கப்பட்ட சூரிய சக்திப் பலகைகளுடன் (Solar Panels) ஒருங்கிணைக்கப்பட்ட மின்கல (Battery) வலுச் சேமிப்பு முறைமைகளிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான புதிய கட்டண முறையை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முறைமையின் கீழ், மின்சாரத்திற்கான அதிக கேள்வி நிலவும் நேரமான மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை மின்கல சேமிப்பு முறைமைகளிலிருந்து விடுவிக்கப்படும் ஒரு கிலோவோட்-மணி (Kilowatt-hour) மின்சார அலகுக்காக 45 ரூபா 80 சதம் செலுத்த மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இந்த புதிய கட்டண முறைமையின் மூலம், அதிக கேள்வி உள்ள இரவு நேரங்களில் தேசிய கட்டமைப்பிற்கு வழங்குவதற்காக பகல் நேரங்களில் சூரிய சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமிக்க, சூரிய சக்தி உற்பத்தியாளர்களை வலுச் சேமிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பது எதிர்பார்க்கப்படுகிறது.