சொகுசு வாகனம் குறித்து சாமர சம்பத் தசநாயக்க கேள்வி

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பிரதமர் கூறியிருந்தாலும், சிலர் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாகனங்களை நீங்கள் கொடுக்கவில்லை என்று பொறுப்புடன் கூறுகிறீர்கள். இன்று சில வீடுகளுக்கு முன்னால் ரேஞ்ச் ரோவர் கார் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றத்தில் ஒரு அமைச்சர் ரேஞ்ச் ரோவரை பயன்படுத்துகின்றார். ரேஞ்ச் ரோவரின் விலை வீ8 காரை விட அதிகம். வீ8 இல் பயணிப்பது கடினம் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க