சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

சேவைக் கட்டணங்கள் இன்று புதன்கிழமை முதல் உயர்த்தப்படுவதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அமல்படுத்தியதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

புதிய மொபைல் கட்டணங்கள் குறித்த விவரங்களை தங்கள் உத்தியோகபூர்வ இணையதளங்கள் மூலம் பெறலாம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளன.