
சேருவிலயிலிருந்து மூதூருக்கான புதிய பஸ் சேவை ஆரம்பித்து வைப்பு!
சேருவிலயிலிருந்து மூதூருக்கான புதிய பஸ் சேவை, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவினால் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் பஸ் சேவையானது சேருவிலயிலிருந்து தோப்பூர் ஊடாக மூதூர் பிரதேசத்தை சென்றடையவுள்ளது.
தினந்தோறும் மூன்று தடவைகள் இவ் பயணிகள் போக்குவரத்து சேவையானது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய பஸ் சேவை மூலம் சேருவில,தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், கணேசபுரம், கட்டைபறிச்சான் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
