சேமித்து வைத்திருந்த எரிபொருளால் பரிதாபமாக உயிரிழந்த பெண்

திருகோணமலை-அன்புவெளிபுரத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுவாமிக்கு விளக்கேற்றிவிட்டு வீசிய தீக்குச்சி, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் மீது விழுந்ததால் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.