சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு வழக்கு ஒத்தி வைப்பு

-கிண்ணியா நிருபர்-

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகாரம் எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதிக்கு மூதூர் நீதவான் நீதிமன்றால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மூதூர் நீதிமன்ற பதில் நீதவானால் இவ்வாறு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குளமலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பேர் கடந்த 11 ஆம் திகதி சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தினை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் கடந்த 15 ஆம் திகதி விஜயம் செய்து பார்வையிட்டதுடன், குறித்த வழக்கானது இன்று மூதூர் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

இது தொடர்பான வழக்கை மூதூர் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் முன்னர் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கில் இரு தரப்பினரும் இன்று ஆஜராகியிருந்தனர்.

கைது செய்யப்பட்டு சொந்த பிணையில் விடுவிக்கப்பட்ட 10 நபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன், நா.மோகன்,  சிரேஷ்ட சட்டத்தரணி டாக்டர் தங்கமுத்து ஜயசிங்கம் ஆகியவர்கள் ஆஜராகியிருந்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்