சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகுமென என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

6,234 விவசாயிகளுக்கு 166.7 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட 13,376 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்த இழப்பீடு முதல் கட்டமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்