செல்பி எடுக்க சென்ற யுவதி மாயம்

அத்தனகலு ஓயாவில் 7 பேருடன் நீராட சென்ற யுவதி செல்பி எடுக்க முயன்ற போது நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை, குணசிங்கபுர தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வரும் புறக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் தொண்டராசிரியராக பணிப்புரியும் பாத்திமா பஸ்னாவே (வயது – 20) இவ்வாறு ஊயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது கால் தவறி விழுந்துள்ளார் இதையடுத்து தனக்கு நீச்சல் தெரியாது என அவர் கூச்சலிட்டுள்ளதுடன் அதனை தொடந்து யுவதி நீரில் அடித்துச் சென்றுள்ளமை பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யுவதியை நேற்று பிற்பகல் வரை பொலிஸார் அப்பகுதி மக்களுடன் இணைந்து கண்டுபிடிக்க முயற்சித்திருந்தாலும் யுவதி மீட்கப்படவில்லை என்பதுடன் யுவதியை தேடும் பணிகள் கடற்படையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.