செம்மணி விடயத்திற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்
செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் இன்றைய (02) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த விடயம் தொடர்பான வழக்கொன்று கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் நீதியமைச்சின் தரப்பில் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்குக்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனவும், வழக்கு இடம்பெறுவதால் இது குறித்த மேலதிக விடயங்களை தம்மால் தெரிவிக்க முடியாது எனவும் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.