செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருள்களை பார்வையிட பொது மக்களுக்கு சந்தர்ப்பம்

யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட சான்று பொருள்களை அடையாளம் காணும் வகையில், இன்று அவை பொது மக்களுக்குக் காட்சிப்படுத்தப்படுகின்றன .

இன்று பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணிவரை சித்துப்பாத்தி வளாகத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

தமது உறவுகளைஇழந்தவர்கள் எவ்வித அச்சமுமின்றி சித்துப்பாத்தி வளாகத்துக்குச் சென்று, அடையாளங்களை உறுதிப்படுத்த முடியும் எனசட்டத்தரணி வீ.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றைய தினமும் ஸ்கேன் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது .