செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

இந்தியாவில் சென்னை செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பெரவள்ளூரைச் சேர்ந்த ஜெயசித்ரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் அயனாவரத்தில் வசிக்கும் தனது சகோதரி வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்து மயங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சர்க்கரை அளவு அதிகமாகவும், நாடித்துடிப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் கூறிய மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அயனாவரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்