செப்டெம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக அறிவிக்க தீர்மானம்

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக அறிவிக்க டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமென டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்துள்ளார் .

செப்டெம்பர் மாதத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதார கொள்கை மற்றும் அதன் செயன்முறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.