செப்டெம்பரில் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2025 செப்டெம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 52ஆயிரத்து 246 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து மொத்தம் 14,300 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.இது 27.4% அதிகரிப்பாகும் .

ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,092 சுற்றுலாப் பயணிகளும் ஜேர்மனியிலிருந்து 3,488சுற்றுலாப்
பயணிகளும் , சீனாவிலிருந்து 2,796 சுற்றுலாப் பயணிகளும் அவுஸ்திரேலியவிலிருந்து 2,603
சுற்றுலாப் பயணிளும் இக்காலப் பகுதியில் ​​ இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேநேரம் 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரை இலங்கைக்கு 1,618,769 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.

அவர்களில், 339,895 பேர் இந்தியாவிலிருந்தும், 155,233 பேர் இங்கிலாந்திலிருந்தும், 119,132 பேர் ரஷ்யாவிலிருந்தும் வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை
தெரிவித்துள்ளது.