செப்டம்பரில் அதிகரித்த பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் இருந்த 1.2% உடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதம் 1.5% ஆக அதிகரித்துள்ளது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் உணவுப் பணவீக்கமே முதன்மை பணவீக்கம் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

அதன்படி,ஓகஸ்ட் மாதம் 2% ஆக இருந்த உணவுப் பணவீக்கம், செப்டம்பர் மாதம் 2.9% ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், உணவல்லா பணவீக்கம் சற்று குறைந்துள்ளது:

ஓகஸ்ட் மாதம் 0.8% ஆக இருந்த உணவல்லா பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 0.7% ஆகக் குறைவடைந்துள்ளது.